Editorial / 2019 செப்டெம்பர் 20 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத்
கேரளா கஞ்சா வைத்திருந்த, விற்பனை செய்த இருவரை, திருகோணமலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இருவேறு பகுதிகளில் வைத்து, திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார், நேற்று (19) மாலை கைதுசெய்துள்ளனர்.
திருகோணமலை பிரதான வீதி, பூம்புகார் பகுதியில், கேரளா கஞ்சா வைத்திருந்த இளைஞர் (வயது 22) ஒருவரை கைதுசெய்துள்ள பொலிஸார், அவரிடமிருந்து 21 கிராம் கேரளா கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் திருகோணமலை நீதிமன்ற வீதி, மனையாவெளி பகுதியில் கேரளா கஞ்சா விற்பனை செய்த குடும்பஸ்தர் (வயது 32) ஒருவரை கைதுசெய்துள்ள பொலிஸார், அவரிடமிருந்து 45கிராம் கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளனர்.
மேற்படி இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago