Editorial / 2019 பெப்ரவரி 15 , பி.ப. 01:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத், ஏ.ஆர்.எம்.றிபாஸ், அப்துல்சலாம் யாசீம், ஒலுமுதீன் கியாஸ்
திருகோணமலை, கிண்ணியா பகுதியில் கேரள கஞ்சா வைத்திருந்த இளைஞன் ஒருவர், திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவுப் பொலிஸாரால் இன்று (15) கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகலையடுத்து மேற்கொள்ளப் பட்ட நடவடிக்கையின் போது, கிண்ணியா சல்லிக் கிளப், நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞனே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து 42 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக, பிராந்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவுப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞனை, கிண்ணியாப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
1 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago