எப். முபாரக் / 2017 நவம்பர் 04 , பி.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, தம்பலகமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அரைக் கிலோகிராம் கேரளக் கஞ்சாவை வைத்திருந்த நபபொருவர், இன்று (4) கைதுசெய்யப்பட்டுள்ளாரென, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முள்ளிப்பொத்தானைப் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர், கஞ்சா வைத்திருப்பதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து, அரைக் கிலோகிராம் கேரளக் கஞ்சாவுடன், சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரைத் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தம்பலகமம் பொலிஸார் தெரிவித்தனர்.
14 minute ago
45 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
45 minute ago
1 hours ago