2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கேரள கஞ்சாவுடன் குடும்பஸ்தர் இருவர் கைது

Editorial   / 2017 நவம்பர் 25 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன்   கியாஸ், ஹஸ்பர் ஏ ஹலீம்,அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவில், அலக்ஸ் தோட்டம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, சர்வோதயத்துக்கு முன்னாள் உள்ள பஸ்தரிப்பிடத்தில் வைத்து கேரள கஞ்சா வைத்திருந்த    41  வயது குடும்பஸ்தர் ஒருவரை, திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார்  நேற்று   (24) இரவு 7.30 மணியளவில் கைது செய்துள்ளனர்.

இவரிடமிருந்து  500  கிராம் கேரள கஞ்சாவை பொலிஸார்  கைப்பற்றினர்.

அத்தோடு, இவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மற்றும் ஒருவரும் நேற்று (24) இரவு 8.30 மணியளவில் அவரது வீட்டில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

47 வயதான குறித்த குடும்பஸ்தரிடமிருந்து ஒரு கிலோவும் 600 கிராமும் கேரள கஞ்சாவை பொலிஸார் மீட்டனர்.

கைது செய்யப்பட்ட இரு  நபர்களையும் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவையும்   உப்புவெளி  பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ஜனோஜன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X