எப். முபாரக் / 2018 ஓகஸ்ட் 11 , பி.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்கு 3 கிலோ 500 கிராம் கேரளா கஞ்சாவை கொண்டுச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை இம்மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று(11) உத்தரவிட்டார்.
யாழ்ப்பாணம் மருதங்கேணி பகுதியைச் சேர்ந்த கணவன், மனைவி, மனைவியின் அக்கா உட்பட 27,28,மற்றும் 31 வயதுடைய மூவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த, சந்தேகநபர்களை திருகோணமலை சந்தியில் வைத்து கேரளா கஞ்சாவுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களை திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே, விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago