2025 மே 14, புதன்கிழமை

கேரளா கஞ்சா, சூது விவகாரம்: எழுவர் சிக்கினர்

Editorial   / 2017 நவம்பர் 28 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத். எப்.முபாரக், ஒலுமுதீன் கியாஸ், ஹஸ்பர் ஏ ஹலீம், தீஷான் அஹமட், அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பொலிஸ் பிரிவில் குறிஞ்சாக்கேணி, மாகாத் நகர் நண்டுக் குடா பகுதியில் கேரளாக் கஞ்சா வைத்திருந்த ஒருவரும், உப்புவெளி பொலிஸ் பிரிவில் சூது விளையாடிய அறுவரும், திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாரால், நேற்றுத் திங்கட்கிழமை  (27) மாலை கைதுசெய்துள்ளனர்.

குறிஞ்சாக்கேணியில் 55   வயது குடும்பஸ்தரிடமிருந்து  09 கிராம் கேரளாக் கஞ்சாவை பொலிஸார்  கைப்பற்றினர்.

கைதுசெய்யப்பட்ட நபர், மேலதிக நடவடிக்கைகளுக்காக கேரளாக் கஞ்சாவுடன் கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, மிஹிந்த புரம் பகுதியில் நீண்டகாலமாக சூது விளையாடி வந்த 6 பேர், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சந்திரகுமார வழங்கிய தகவலின் அடிப்படையில், பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பை அடுத்து, மாலை 4 மணியளவில்  கைது செய்யப்பட்டனரென, திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் பொலிஸார் தெரிவித்தனர்,

இவர்களிடம் இருந்து ஆறாயிரம் ரூபாய்  பணம் உட்பட சூது விளையாட்டுக்காகப் பயன்படுத்தப்பட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டதோடு,  இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுப் பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ஜனோஜன் தெரிவித்தார்.

சம்பவங்கள் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X