2026 மார்ச் 19, வியாழக்கிழமை

கேரளா கஞ்சா வைத்திருந்த இருவர் கைது .

ஏ.எம்.ஏ.பரீத்   / 2018 பெப்ரவரி 07 , பி.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவில் கேரளா கஞ்சா வைத்திருந்த இருவர் நேற்று  (06)  மாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் சீனக்குடா  வெள்ளை மணல் வீசி சந்தியில் கேரளா கஞ்சா வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து 10 கிராம் கேரளா கஞ்சாவினை பொலிஸார்  மீட்டுள்ளனர்

குறித்த சந்தேகநபரை சீனக்குடா பொலிஸ் நிலையத்தில் மேலதிக விசாரணைக்காக
திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் ஒப்படைத்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மற்றும் ஒருவரும் தானிய கம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேகநபர் பைசல் நகரைச் சேர்ந்தவர் எனவும் இவரிடமிருந்து 100 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இவர், திருகோணமலை தலைமையகப் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .