Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 04 , பி.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத்
மூதூர் மற்றும் கிண்ணியா பொலிஸ் பிரிவு பகுதிகளில் கேரளா கஞ்சா வைத்திருந்த இரண்டு இளைஞர்கள் உட்பட ஐவரை, திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப்பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்த திருமலை தலைமையகப் பொலிஸ் பிரிவிலுள்ள, கணேஸ் லேன் சிங்கபுர பகுதியில் கேரளா கஞ்சா வைத்திருந்த (வயது- 19) இளைஞரே நேற்றுக் காலை கைது செய்யப்பட்டார்.
மூதூர் பொலிஸ் பிரிவு பால நகர் மூதூர் -01 இல் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு கேரளா கஞ்சா வைத்திருந்த (வயது -22) மேலுமொரு இளைஞர் கைது செய்யப் பட்டுள்ளார். இதனையடுத்து கிண்ணியா பொலிஸ் பிரிவு நடு ஊற்று பகுதியில் பாடசாலைக்கு அருகில் நேற்றுமுன்தினம் இரவு கேரளா கஞ்சா வைத்திருந்த மூன்று குடும்பஸ்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக திருகோணமலை போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சந்தேக நபர்கள் முறையே திருகோணமலை தலைமையக பொலிஸ் மற்றும் மூதூர், கிண்ணியா பொலிஸ் நிலையங்களில் கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவோடு ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட் டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .