Editorial / 2017 ஒக்டோபர் 28 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தீஷான் அஹமட்
திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேம்காமம் பகுதியில் சட்டவிரோதமாக, வடி சாராயம் காய்ச்சப் பயன்படுத்தப்படும் கோடா 20 ஆயிரம் மில்லிலீற்றரை வீட்டில் மறைத்து வைத்திருந்த 28 வயதுடைய பெண் ஒருவரை, நேற்று (27) மாலை கைது செய்துள்ளதாக, மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண்ணிண் வீட்டில் சட்டவிரோத வாடி சாராயம் காய்ச்சப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக, பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், மேற்படி பெண்ணின் வீட்டை சோதனைக்குட்படுத்திய போது, வீட்டின் அலுமாரிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த மேற்படி கோடா கைப்பற்றப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட பெண் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவரை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
5 minute ago
33 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
33 minute ago
1 hours ago