2025 மே 19, திங்கட்கிழமை

சைக்கிள் - மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: ஒருவர் பலி; ஒருவர் படுகாயம்

George   / 2016 ஓகஸ்ட் 15 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா, ஒலுமுதீன் கியாஸ், ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியா-பிரதேச செயலகத்துக்கு முன்பாக சைக்கிள் - மோட்டார் சைக்கிள் என்பன மோதி விபத்துக்குள்ளானதில் சைக்கிளில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளார்.

இன்றிரவு  8.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் படுகாயமடைந்த, மோட்டார் சைக்கிளில் சென்ற நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கிண்ணியா-குட்டிக்கராச்சி பகுதியைச்சேர்ந்த அபூபக்கர் ஹம்ஷா (65 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் அதே இடத்தைச்சேர்ந்த பீ.ஆர்.பைறூஸ் (25வயது) எனவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம், கிண்ணியா தள வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்
விபத்து தொடர்பாக கிண்ணியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X