2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

சு.கவின் 65ஆவது மாநாடு தொடர்பான விளக்கக் கூட்டம்

Thipaan   / 2016 ஓகஸ்ட் 18 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 65வது மாநாட்டில் பங்குபற்றுவது தொடர்பில், திருகோணமலை மாவட்ட சுதந்திரக் கட்சியின் அங்கத்தவர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம், திருகோணமலை தேர்தல் தொகுதி அமைப்பாளரும் பிரதி அமைச்சருமான சுசந்த புஞ்சிநிலமே தலமையில், திருகோணமலை நகரசபை மண்டபத்தில், நேற்று இடம்பெற்றது

இந்த நிகழ்வில் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, மூதூர் தொகுதி அமைப்பாளரும் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சருமான நஜீப் ஏ மஜீத், சேருவில தேர்தல் தொகுதி அமைப்பாளர் நளின் குணவர்த்தன, திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் ஆரியவதி கலப்பதி மற்றும் கட்சி அங்கத்தவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .