2025 மே 19, திங்கட்கிழமை

சூதாடிய நால்வருக்கும் பிணை

Thipaan   / 2016 ஓகஸ்ட் 21 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை, கிண்ணியா பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட நால்வரை,  ஒரு இலட்சம் ரூபாய் சரீரப்பிணையில் செல்லுமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ரி.சரவணராஜா, நேற்றுச் சனிக்கிழமை(20) உத்தரவிட்டார்.

கிண்ணியா, குட்டிக்கரைச்சி, குறிஞ்சாக்கேணி மற்றும் ஹொரவப்பொத்தானைப் பகுதிகளைச் சேர்ந்த 35,40,23, மற்றும் 26 வயதுடைய நால்வருக்கே பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்கள் நால்வரும், வியாழக்கிழமை (18) மாலையில் கிண்ணியா முனைச்சேனைப் பகுதியில் சூது விளையாடிய போது பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்ப்பட்டனர்.

குறித்த சந்தேகநபர்கள் நால்வரையும் விசாரணைகளின் பின்பு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே, பிணையில் செல்லுமாறு உத்தரவிட்டதோடு, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி வழக்குத் தவணைக்கு நீதிமன்றுக்கு சமூகமளிக்குமாறும் உத்தரவிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X