Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2017 பெப்ரவரி 28 , மு.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ்
திருகோணமலை மாவட்டம், குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல்வக்கைக்குளக் கிராம மக்கள் குடிநீர் இல்லாமல் பல்வேறு பிர்ச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கின்றனர்.
சுனாமிப் பாதிப்புக்குப் பின்னர், சுமார் 260 குடும்பங்கள் வரை வாழ்ந்து வரும்
இக்கிராமமே, முதன் முதலாக மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளது.
எனினும், இக்கிராமத்தில் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் பல்வேறு சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர். இக்கிராமத்தில் குடியேறி சுமார் பத்து வருடங்கள் கடந்தும் இதுவரைக்கும் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
கிராமத்தில் பல கிணறுகள் உள்ளபோதிலும், அவற்றிலுள்ள நீரைக் குடிக்க முடியாத வகையில், உவர்த்தன்மை காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய மக்கள், பிரதேச சபையிடம் சென்று, பவுசர்கள் மூலம் குடிநீரைத் தருமாறு கேட்டபோதிலும் அவர்கள் அதற்கு மறுத்துவிட்டதாக, குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே, நோய்களிலிருந்து தமது பிள்ளைககளைக் காக்கும் பொருட்டு, சுத்தமான குடிநீரைப் பெற்றுத்தருமாறு இம்மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
46 minute ago
6 hours ago
15 May 2025