Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 01 , மு.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக், பைஷல் இஸ்மாயில்
இலங்கையின் சுதந்திரதினத்தையிட்டு 'சூழல் பாதுகாப்பு' எனும் தொனிப்பொருளில் மரக்கன்றுகள் நடுகையும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்கு இலவசக் கருத்தரங்கும் திருகோணமலை, கந்தளாய்ப் பிரதேசத்தில் நடைபெறவுள்ளது.
திருகோணமலை கந்தளாய் சமூக நலன்புரி அமைப்பும் கந்தளாய் நியூ சன்றைஸ் விளையாட்டுக்கழகமும் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக நியூ சன்றைஸ் விளையாட்டுக்கழகத்தின் செயலாளர் எம்.மஸாஹிம் தெரிவித்தார்.
கந்தளாய் அனோமாச் சந்தியிலிருந்து கந்தளாய் புகையிரதப் பாதைவரையான இருமருங்குகளிலும் 68 மரக்கன்றுகள்; நடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்போது, மதுரைமரக் கன்றுகளும் வேப்பமரக் கன்றுகளும் நடப்படவுள்ளன.
இதேவேளை, கந்தளாய் கல்வி வலயத்துக்குட்பட்ட தமிழ்மொழிப் பாடசாலைகளைச் சேர்ந்த ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்கு கந்தளாய் அல்தாரிக் மகா வித்தியாலயத்தில் எதிர்வரும் 07ஆம் திகதி காலை 09 மணி முதல் மாலை 04.30 மணிவரை இலவசக் கருத்தரங்கு நடத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026