Editorial / 2018 நவம்பர் 03 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை மாவட்டத்தில் முள்ளிப்பொத்தானைப் பகுதியிலுள்ள ச.தொ.ச நிறுவனத்தின் கிளை, இனந்தெரியாத நபர்களால் நேற்று (02) அதிகாலை ஒரு மணியளவில் உடைக்கப்பட்டு, பெருந்தொகையான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக, தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த ச.தொ.ச கிளை, சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் திறந்து வைக்கப்பட்டதாகவும், ஆதாலால் பாதுகாப்பு உத்தியோகத்தரோ, சீ.சீ.டி கெமரா போடப்பட்டிருக்கப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இக்கொள்ளையில் சுமார் 25 இலட்சத்துக்கு அதிகமான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக தம்பலகாமம் பொலிஸார், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
7 hours ago