2025 மே 23, வெள்ளிக்கிழமை

செயலமர்வு

Suganthini Ratnam   / 2016 மார்ச் 27 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை, மொறவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 'பாடசாலைகளிலிருந்து இடைவிலகிய மாணவர்களை மீண்டும் பாடசாலைக்கு அனுப்ப வேண்டும்' எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வூட்டும் செயலமர்வு, மஹாதிவுள்வெவ பிரதேசத்திலுள்ள விஐயராஐ விகாரை மண்டபத்தில் நாளை  திங்கட்கிழமை முற்பகல் 10 மணி முதல்  நடைபெறவுள்ளது.

சிறுவர் அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்தச் செயலமர்வின்போது, சிறுவர்களை  வேலைக்கு அனுப்புதல், சிறுவயதுத் திருமணம் ஆகியவற்றை இல்லாமல் செய்வது தொடர்பில் இடைவிலகிய மாணவர்களை மீண்டும் பாடசாலைக்கு அனுப்புதல்  தொடர்பில் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வூட்டப்படவுள்ளதாக அந்த அமைப்பின்  செயலாளர் கனீப் சிபான் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X