2025 ஜூலை 31, வியாழக்கிழமை

சுருக்கு வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்தர் கைது

Gavitha   / 2016 ஜூலை 02 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

திருகோணமலை, புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குபட்ட பகுதியிலுள்ள கொக்கிளாய் கடற்பரப்பில், சட்ட விதிமுறைகளை மீறி சுருக்கு வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவரை, புல்மோட்டை கடற்படையினர் இன்று சனிக்கிழமை (02) அதிகாலை கைது செய்துள்ளதாக, புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

கொக்கிளாய் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டள்ளார்.

அரச சட்டவிதிமுறைகளின் படி, கரையிலிருந்து 7 கிலோ மீற்றருக்கு உட்பட்ட கடற் பகுதியில், சுருக்கு வலைகள் பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட முடியாது. அதனை மீறி மீன் பிடியில் ஈடுபட்டமையினாலேயே குறித்த மீனவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவரிடமிருந்து படகு, இஞ்சின் மற்றும் தடை செய்யப்பட்ட வலைகள் போன்றவற்றை கைப்பற்றியுள்ளதாகவும் அவரை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .