2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சாராயப் போத்தல்கள் வைத்திருந்தவருக்கு அபராதம்

Thipaan   / 2016 ஜூன் 22 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

திருகோணமலை கந்தளாய் தலைமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் பராக்கிரமபாகு மாவத்தையிலுள்ள பலசரக்குக் கடையில், 12 சாராயப் போத்தல்களை வைத்திருந்த 38 வயது நபரொருவருக்கு, கந்தளாய் நீதிமன்ற நீதவான் எச்.கியூ தம்மிக, 65 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.

அனுமதிப்பத்திரமில்லாமல் சாராயம் வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்தநபரின் பலசரக்குக் கடையை சோதனைக்குட்படுத்திய போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த சாராய போத்தல்களை கைப்பற்றிய கந்தளாய் தலைமையக சிறுகுற்றத் தடுப்பு பொலிஸார், அந்த நபரையும் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரை கந்தளாய் நீதிமன்றத்தில், செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தியபோதே நீதவான் மேற்கண்ட உத்தரவைப்பிறப்பித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X