2025 மே 16, வெள்ளிக்கிழமை

சூரங்கல் வரை பஸ்ஸை செலுத்துமாறு கோரிக்கை

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 26 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக், ஏ.எம்.ஏ.பரீத்

திருமலையிலிருந்து செல்கின்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான அல்லது தனியார் பஸ்களை, சூரங்கல் சந்திக்குச் சென்று, அங்குள்ள தூரப் பிரயாணம் செய்யக்கூடிய மக்களை ஏற்றிச் செல்லுமாறு, மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

நீண்ட தூர சேவையில் ஈடுபடுகின்ற பஸ்கள், கிண்ணியா துறையடி வீதியினூடாகச் செல்வதால் வான்எல, சூரங்கல், நடுஊற்று, மணிராசங்குளம், ஆலங்கேணி, குரங்குபாஞ்சான், சுங்கான்குழி, காக்காமுனை, குறிஞ்சாக்கேணி, கச்சக்கொடித்தீவு ஆகிய பிரதேச மக்கள், பல சிரமங்களுக்கும் அசௌகரியங்களுக்கும் முகங்கொடுத்து வருகின்றனர்.

மேற்குறிப்பிட்ட பிரதேசங்களிலிருந்து முச்சக்கரவண்டிக்கு 300, 400 ரூபாயைச் செலுத்தி, கிண்ணியா பிரதான தோணா பழைய ஆஸ்பத்திரி சந்திக்குச் செல்ல வேண்டிய நிலையுள்ளதாக, மக்கள் சுட்டிக்காட்டினர்.

எனவே, இந்த பஸ் சேவையை சூரங்கல் வரையாவது செல்ல, உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பிரதேச மக்கள் கோரிநிற்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .