Princiya Dixci / 2016 மார்ச் 01 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.என்.எம்.புஹாரி
சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீதனவெளிப் பிரதேசத்தில் குடும்பத் தகராரு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளைத் தாக்கிய இருவரை, தலா 1 இலட்சம் ரூபாய் இரண்டு சரீரப் பிணையில் விடுதலை செய்த மூதூர் நீதவான் நீதிமன்ற நீதவான் ஜ.என்.றிஸ்வான், இம்மாதம் 31ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்தார்.
சீதனவெளிப் பிரதேசத்தைச் சேர்ந்த எஸ். பரமேஸ்வரி, உதயராசா நிமலன் ஆகியோருக்கே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவம் தொடர்பில் குறித்த இருவரையும் கடந்த சனிக்கிழமை (27) கைதுசெய்த சம்பூர் பொலிஸார், அவர்களைத் திங்கட்கிழமை (29) மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே நீதவான் இவ்வாறு உத்தரவு பிறப்பித்தார்.
தாக்குதலுக்குள்ளான இரண்டு சிறுமிகளும் தொடர்ந்தும் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago