2026 மார்ச் 23, திங்கட்கிழமை

சிறுமி துஷ்பிரயோகம்: 03 பிள்ளைகளின் தந்தைக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 05 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக் 

திருகோணமலை, புல்மோட்டைப் பிரதேசத்தில் 14 வயது சிறுமியை, துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய சந்தேகநபரை, இம்மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குச்சவெளி நீதிமன்ற பதில் நீதிவான் ஹயான் மீ ஹககே, நேற்று வியாழக்கிழமை (04) மாலை  உத்தரவிட்டார்.

புல்மோட்டையைச் சேர்ந்த 39 வயதுடைய 03 பிள்ளைகளின் தந்தையே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

குறித்த சந்தேகநபர் தனது மனைவியின் தம்பியின் மகளையே துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாக புல்மோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.

புல்மோட்டைப் பொலிஸார், குச்சவெளி நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் சந்தேகநபரை, நேற்று ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
       
இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை புல்மோட்டைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .