2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

சிறுமியை அழைத்துச் சென்ற குடும்பஸ்தருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 21 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக் 

திருகோணமலை, ஈச்சிலம்பற்று பிரதேசத்தில் 15 வயதுடைய சிறுமியொருவரை நீண்ட காலமாகக் காதலித்து வந்ததுடன், இச்சிறுமியை அழைத்துச் சென்ற குடும்பஸ்தரை, எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான், நேற்று புதன்கிழமை (20) உத்தரவிட்டார்.

சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலங்கைத்துறைப் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர், திருமணம் முடித்து ஒரு குழந்தையின் தந்தை என்பதோடு, மனைவியை விட்டுப் பிரிந்த நிலையிலே 15 வயதுடைய சிறுமியைக் காதலித்து ஏமாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், மட்டக்களப்பிலுள்ள நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சிறுமியை, சந்தேகநபர் அழைத்துச் சென்றுள்ளார். 

தகவலறிந்து, சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேகநபரை, மட்டக்களப்புப் பொலிஸார் ஊடாக செவ்வாய்கிழமை (19) மாலை கைதுசெய்ததாகப் சேருநுவரப் பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேகநபரை, மூதூர் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் நேற்று (20) ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

சிறுமி, சேருநுவர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சேருநுவரப் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .