2025 ஜூலை 26, சனிக்கிழமை

சிறுமியை முச்சக்கரவண்டியால் மோதியவருக்கு விளக்கமறியல்

Thipaan   / 2016 ஒக்டோபர் 20 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

திருகோணமலை, மூதூர் பகுதியில், 4 வயது சிறுமியை முச்சக்கர வண்டியால் மோதிக் காயப்படுத்திய 26 வயது நபரை, எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மூதூர் நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் உத்தரவிட்டார்.

செவ்வாய்க்கிழமை (18) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்துடன் தொடர்புடைய நபரை, புதன்கிழமை (19) கைதுசெய்த பொலிஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே, நீதவான் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தார்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த 4 வயது சிறுமி, திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X