2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

சிறப்பு அணிவகுப்பும் பரிசளிப்பு நிகழ்வும்

Niroshini   / 2016 ஜூன் 11 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

இலங்கை  சாரணர் சங்கம், திருகோணமலை மாவட்டக் கிளை ஆகியன இணைந்து, திருகோணமலை நிலாவெளி வீதியில் உள்ள சர்வோதய வளாகத்தில் 4ஆவது ஜம்போரியை கடந்த 8ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரையாக நடத்தி வருகின்றது.

நாட்டின் பல பாகங்களில் இருந்து வருகை தந்து சாரணர் இயக்க அங்கத்தவர்கள் இந்த பாசறையில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த பாசறையின் சிறப்பு அணிவகுப்பும் பரிசளிப்பு நிகழ்வும்  இன்று சனிக்கிழமை பாசறை வளாகத்தில் இடம்பெற்றது.

இதில்,  நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகறுப், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன், உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ்.சுதாகரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X