2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது குளவிக் கொட்டு

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 18 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்எம்.யாசீம்  

திருகோணமலை -தெவனி பியவர பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தரான மகாதிவுள்வெவ, தெவனிபியவர பகுதியைச் சேர்ந்த கே.ஜி.திலகரத்ன (வயது 45) குளவிக் கொட்டுக்குள்ளானதைத் தொடர்ந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிவில் பாதுகாப்பு  திணைக்களத்துக்குச் சொந்தமான விவசாயக் காணிக்கு இவர்  சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோதே குளவிக் கொட்டுக்குள்ளானார்.

இவர் மகாதிவுள்வெவ கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X