Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஒக்டோபர் 27 , மு.ப. 09:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீசான் அஹமட்
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவரின் வீடடுக்குள் ஜன்னலைக் கழற்றி, உட்புகுந்த கொள்ளையர்கள், 31,000 ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் என, குறித்த சட்டத்தரணியால், மூதூர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கழற்றிக் கொழுவி வைக்கப்பட்டிருந்த நீளக் காற்சட்டை பக்கெட்டிலிருந்து 31 ஆயிரம் ரூபாய் பணத்தைத் திருடி விட்டு நீளக் காற்சட்டையையும் கார் திறப்பினையும் வெளியில் வீசிவிட்டு சென்றுள்ளதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உறங்கிக் கொண்டிருந்த சட்டத்தரணி, இன்று (27) அதிகாலை 3 மணியளவில் தீடிரென கண்விளித்துப் பார்த்த போது, வீட்டில் ஒளிர்ந்து கொண்டிருந்த மின்குமிழ்கள் அணைக்கப்பட்டிருப்பதை அவதானித்துள்ளார்.
அவர், மின்குமிழை ஒளிரச் செய்தபோது, வீட்டின் ஜன்னலொன்று உடைக்கப்பட்டு, நீளக்காற்சட்டை வெளியில் வீசப்பட்டு இருந்துள்ளது.
இதனையடுத்து, பணம் வைத்திருந்த நீளக்காற்சட்டையில் கொள்ளையிடப்பட்டு, கார் திறப்பு மாத்திரம் வெளியில் வீசப்பட்டிருந்ததாக குறித்த சட்டத்தரணியால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago