2026 மார்ச் 23, திங்கட்கிழமை

சட்டவிரோத வலைகளை பயன்படுத்திய 12 மீனவர்கள் கைது

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

சட்டவிரோதமான மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 மீனவர்களை கொட்பே பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை  திருகோணமலை துறைமுக பொலிஸார்  கைதுசெய்துள்ளனர்.

திருகோணமலை கடற்பரப்பில் இரண்டு படகுகளில் இந்த மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது, அதிலொரு படகு இயந்திரக் கோளாறு காரணமாக பழுதடைந்துள்ளது. இந்நிலையில், அப்படகை கொட்பே பகுதிக்கு கொண்டுவந்ததாகவும் அதில்  சட்டவிரோதமான மீன்பிடி வலைகள் காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, அப்படகில் சோதனை மேற்கொண்டபோது, சட்டவிரோத மீன்பிடி வலைகள் காணப்பட்டன. இந்நிலையில், மேற்படி 12 மீனவர்களும் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்கள் மாத்தறை, திக்வெல்ல பகுதியைச் சேர்ந்தவர்களெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .