2025 மே 21, புதன்கிழமை

சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றியவர்களுக்கு அபராதம்

Niroshini   / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

அனுமதிப் பத்திரம் இருந்தும் குறித்த நேரம் தவறி ஆற்று மணல் அகழ்வில் ஈடுபட்ட  குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட மூதூர் பிரதேசத்தைச்  சேர்ந்த இருவருக்கு தலா ஐயாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

குறித்த இரு நபர்களையும்  இரு டிப்பர் இயந்திரங்களையும் மூதூர் பொலிஸார் கைது செய்து நேற்று திருகோணமலை  நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது  நீதவான் ஹயான் மீஹககே இவ்வாறு அபராதம் விதித்துள்ளார்.

அத்தோடு அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்பட்டதோடு மணலும் அரசுடமையாக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .