2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

சடலத்தை தேடும் நடவடிக்கை தொடர்கிறது

Niroshini   / 2017 பெப்ரவரி 11 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீஷான் அஹமட்

மூதூர் கடலில் வள்ளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, கடலில் மூழ்கி உயிரிழந்தவரின் சடலத்தை தேடும் பணி, நேற்று இரண்டாவது நாளாகவும் திருகோணமலை கடற்படையினர் மற்றும் பொது மக்கள்  இணைந்து மேற்கொண்டனர்.

 30க்கும் மேற்பட்ட படகுகளுடன் சடலத்தை கடலில் தேடி வருவதாகவும் தேடுதல் நடவடிக்கையின்போது, வள்ளம் மற்றும் மீன் பிடிக்கும் தூண்டில்கள் போன்றன மீட்கப்பட்டுள்ளதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

வியாழக்கிழமை அதிகாலை மீன்பிடிப்பதற்காக கடலுக்கு தனிமையில் சென்ற மூதூர் பஹ்ரியா நகரைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான பஸ்ரின் (28) என்பவரே கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்..

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X