2025 மே 08, வியாழக்கிழமை

‘சட்டங்கள் முழுமையாக அமுல்படுத்தப்படும்’

அப்துல்சலாம் யாசீம்   / 2018 ஜனவரி 25 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் சட்டங்களை முழுமையாக அமுல்படுத்துவதாகவும் திருகோணமலை மாவட்டத்தில் சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் தேர்தலை நடத்த பொலிஸாருக்கும் அதிகாரிகளுக்கும் தெளிவுபடுத்தியுள்ளதாகவும், திருகோணமலை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் சஜித் வெல்கம தெரிவித்தார்.

அத்துடன்,  திருகோணமலை மாவட்டத்தில் 13 உள்ளூராட்சிமன்றங்களுக்கும் 220 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக, 2,368 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனரெனவும் உதவித் தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.

23 அரசியல் கட்சிகளும் 8 சுயேட்சைக்குழுக்களும் போட்டியிடுகின்ற நிலையில், 272,822 பேர் இம்முறை வாக்களித்த தகுதி பெற்றுள்ளனரெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X