A.K.M. Ramzy / 2021 ஜனவரி 09 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தீனேறி, கண்டற்காடு பெரிய வெளி, சின்ன வெளி, பட்டியானூரு, சுங்கான் குழி, குரங்கு பாஞ்சான்,மஜீத் நகர்,வெல்லங்குளம் உட்பட 11 விவசாய சம்மேளனங்கள் இணைந்து இன்று (09)கிண்ணியா மஜீத் நகர் இராணுவ வீதியில் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தினர்.
மகாவலி கங்கையின் முடிவு பகுதியான கங்கை ஆற்று பகுதிகளில் சட்டவிரோதமான மணல் அகழ் வினால் 2500ஏக்கர் வயல்களும் விவசாயிகளும் நிரந்தர குடியிருப்பாளர்கள், பாதசாரிகள் என பலரும் பாதிக்கப்படுகின்றனர். இது நிறுத்தப்பட வேண்டும்.
இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட கிரவல் வீதி மற்றும் விவசாய உள் வீதிகள் போன்றவற்றின் ஊடாக கனரக வாகனங்கள், உழவு இயந்திரம் போன்றவற்றில் ஏற்றி வருகின்றனர்.
இவ்வாறான சட்டவிரோத வேலைகளை நிறுத்தி எமது விவசாய உற்பத்திகளை சந்தைப்படுத்தும் இடத்துக்கு கொண்டு செல்வதற்கு அவசரமாக இச்செயல்களை நிறுத்தி போக்குவரத்துக்கு உகந்த வகையில் வீதிகளை புனரமைத்து தருமாறும் கோரிக்கையை முன் வைத்து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை விவசாயிகள் நடத்தினர்.
13 minute ago
16 minute ago
27 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
16 minute ago
27 minute ago
31 minute ago