2025 மே 16, வெள்ளிக்கிழமை

சந்தேகநபர்கள் நால்வர் கைது

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 26 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

கட்டுத்துவக்கு, வெடிபொருட்கள் மற்றும கத்தி என்பவற்றுடன் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரை, திருகோணமலை, அடம்பன பகுதியில் வைத்து, இன்று (26) அதிகாலை கைதுசெய்துள்ளதாக, கோமரங்கடவெலப் பொலிஸார் தெரிவித்தனர்.

குச்சவெளி பிரதேசத்திலிருந்து முச்சக்கரவண்டியில் வந்தவர்களை சந்தேகத்தின் பேரில், பொலிஸார் நிறுத்திச் சோதனையிட்ட போது, குறித்த பொருட்களுடன் மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குச்சவெளி பிரதேசத்தைச் சேரந்த 18 வயதுடைய இருவரும் 39 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகப்  பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, மோட்டார் சைக்கிளில் வந்த அதே இடத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரைச் சோதனையிட்ட போது, அவரிடமிருந்து 2 கிராம் கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் கோமரங்கடவெல பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .