2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

சம்பூர் அனல் மின்நிலைய திட்டத்துக்கு எதிராக தனிநபர் பிரேரணை

Sudharshini   / 2016 ஏப்ரல் 23 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார்

சம்பூர் அனல் மின்நிலைய திட்டத்துக்கு எதிரான தனிநபர் பிரேரணை,  செவ்வாய்கிழமை (26)  இடம்பெறவுள்ள கிழக்கு மாகாண சபை அமர்வில் முன்வைக்கப்படவுள்ளது.

இந்த பிரேரணையை கிழக்கு மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் குமாரசாமி நாகேஸ்வரன் முன்வைக்கவுள்ளார்.

'இப்பிரேரணைக்கு  கிழக்கு மாகாண சபை உறுப்பிர்கள் அனைவரும் ஆதரவு வழங்கி, சம்பூர் அனல் மின்நிலையம் வேண்டாம் என்ற தீர்மானம் ஒன்றை ஏகமனதாக நிறைவேற்றி, அதை அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும்' என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இக்கோரிக்கையை முன்வைத்து மாவட்டத்தின் பல தனியார் அமைப்புக்களும் கடற்றோழிலாளர் சங்கங்கள், விவசாய சங்கங்கள் தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்கள்; இணைந்து கிழக்கு மாகாணசபைக்கு முன் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்  என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .