Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2016 ஏப்ரல் 01 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.என்.எம்.புஹாரி,பதுர்தீன் சியானா,ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை, மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்;பட்ட சம்பூர் பிரதேசத்தில்; அனல் மின்சார நிலையம் அமைப்பதைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை ஜும்மாத் தொழுகையின் பின்னர் அங்கு ஆர்ப்பாட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
மூதூர் பசுமைக் குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுப்பட்ட இந்தப் பேரணியில் கலந்துகொண்ட பொதுமக்கள், இந்த அனல் மின்சார நிலையம் அமைப்பதை தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.
மூதூர் பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாகவுள்ள எரிபொருள் நிரப்பு நிலையச் சந்தியிலிருந்து ஆரம்பமாகிய பேரணி, மூதூர் பிரதேச செயலகம்வரை சென்றது. அப்;பிரதேச செயலாளர் வீ.யுசூப்பிடம் மகஜரையும் பேரணியில் ஈடுபட்டோர் கையளித்தனர்.
ஆர்ப்பாட்ட இடத்துக்கு வருகை தந்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜே.எம்.லாஹிர் தெரிவிக்கையில், 'சம்பூர் பிரதேசத்தில் அனல் மின்சார நிலையம் அமைக்கப்படுமாக இருந்தால் திருகோணமலை, மட்டக்களப்பு பொலன்னறுவை உள்ளிட்ட மாவட்ட மக்கள் பல்வேறுபட்ட நோய்களுக்கும் இலக்காவார்கள். அத்தோடு, இயற்கைத் தாவரங்களும் அழியும் ஆபத்து நிலவும்.இது சம்மந்தமாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்படும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago