2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

சம்பூர் அனல் மின் நிலையத் திட்டத்தை நிறுத்துவதற்காக குரல் கொடுக்க வேண்டும்

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 24 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்

சம்பூர் அனல் மின்சார நிலைய விடயம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தனது மௌனத்தைக் கலைத்;து இந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டுமென மூதூர் கிழக்கு பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திருகோணமலை, மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சம்பூர் பிரதேசத்தில் அனல் மின்சார நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்றுவரும் நிலையில் இத்திட்டத்தை தடை செய்யுமாறு கோரி திருகோணமலை பசுமைக் குழுவின்; ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கையில், 'காலங்காலமாக நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்து வருகின்றவர்கள். இவ்வாறு இதயசுத்தியுடன் செயற்படும்; எங்களுக்கு தீமை பயக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்போது, அவர்கள் குரல் கொடுக்க வேண்டும். அதுவே அவர்கள் எமக்குச் செய்யும் கைமாறாகும்.
தற்போது சம்பூர் பிரதேசத்தில் அனல் மின் நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது. இதன் காரணமாக  எமது ஜீவனோபாயத் தொழிலான விவசாயம் பாதிக்கும் வாய்ப்புள்ளதுடன், எங்களுக்கு நோய்கள் ஏற்படும் ஆபத்தும் உள்ளது.

எனவே, இந்த அனல் மின் நிலையத் திட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வர வேண்டும்' என்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .