Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Gavitha / 2016 ஏப்ரல் 27 , மு.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக், வடமலை ராஜ்குமார்
சம்பூர் நிலக்கரி மின் நிலையம் இரத்துச் செய்யப்பட வேண்டும் என்று, கிழக்கு மாகாண சபையில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்படவிருந்த பிரேரணை, நேற்றையதினம் சமர்ப்பிக்கப்படவில்லை. இந்தப் பிரேரணை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் கு.நாகேஸ்வரனால் சமர்ப்பிக்கப்படவிருந்தது.
கிழக்கு மாகாண சபை அமர்வு, தவிசாளர் சந்திரதாச கலபதி தலைமையில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்குக் கூடியது. சபை அமர்வுக்கு, ஆளுங்கட்சி சார்பாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர்
ஏ.எல்.எம்.நஸீர் உட்பட ஐந்து உறுப்பினர்கள் பிரசன்னமாகியிருந்தனர்.
எதிர்க்கட்சி சார்பாக, முன்னாள் வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்;வை உட்பட மூன்று உறுப்பினர்கள் மாத்திரமே பிரசன்னமாகியிருந்தனர்.
இந்நிலையில், 37 உறுப்பினர்களைக் கொண்ட கிழக்கு மாகாண சபையில் கோரமின்மையால், அவையமர்வை சந்திரதாச கலபதி, ஒரு மணி நேரம் ஒத்திவைத்தார்.
இதனையடுத்து, சபையமர்வு நேற்றுக்காலை 10.40க்கு ஆரம்பமானது. அதன்பின்னரே, நேற்றைய பிரேரணைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
கிழக்கு மாகாணசபையின் நேற்றைய நிகழ்ச்சி நிரலின் பிரகாரம்; 12 பிரேரணைகள் முன்வைக்கப்படவிருந்தன. அதில், சம்பூர் நிலக்கரி மின் நிலையம் இரத்துச் செய்யப்பட வேண்டும் என்ற பிரேரணை சமர்ப்பிக்கப்படவில்லை.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினரான அன்வர், குச்சவெளி பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயத்தை உருவாக்குதல் தொடர்பிலான பிரேரணையைச் சமர்;ப்பிக்கவிருந்தார். அவர், நேற்றையதினம் அவைக்கு சமுகமளிக்காமையால், அப்பிரேரணை எடுத்துக்கொள்ளப்படவில்லை.
இதேவேளை, ஓய்வூதியக் கொடுப்பனவு தொடர்பாக தனிநபர் பிரச்சினை மற்றும் கிழக்கில் அதிகரித்துள்ள மதுபான நிலையங்களைக் கட்டுப்படுத்தல் என்ற பிரேரணை, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் மெத்தானந்த சில்வாவினால் சமர்ப்பிக்கப்பட்டது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தனினால் கொண்டுவரப்படவிருந்த சந்திவெளி-கீலிவெட்டை வீதியை புனரமைக்கக் கோரி தனிநபர் பிரேரணை, அவர் சமுகம் தராமையால் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
அகில இலங்கை ஆசிரியர் ஆலோசகர்களை உள்ளீர்ப்புச் செய்யவேண்டும் என்ற மத்திய அரசாங்கத்துக்கான வேண்டுகோள் மற்றும் அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரியை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என மத்திய அரசாங்கத்துக்கான வேண்டுகோள் என்ற பிரேரணை, தேசிய காங்கிரஸின் உறுப்பினரான உதுமாலெப்பையினால் சமர்ப்பிக்கப்பட்டது.
இதேவேளை, உறுப்பினர் ஆரிப் சம்சுதீனால், கிழக்கு மாகாணத்தில் வருடந்தோறும் மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டியை கல்வி அமைச்சினால் நடாத்த வேண்டும் என்ற பிரேரணையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் இரா. துரைரெட்ணத்தினால், மாற்றுத்திரனாளிகளுக்கான தனியான அரச பாடசாலை நிறுவ வேணடும் என்ற பிரேரணையும் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .