Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2017 நவம்பர் 04 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத், ஹஸ்பர் ஏ ஹலீம்
கிண்ணியாவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட முகையதீன் பிச்சை முஹம்மது ஹனிபா, திருகோணமலை வலயத்துக்கான சமாதான நீதவானாக திருகோணமலை மாவட்ட நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லா முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இவர், கிண்ணியா அல்அக்ஸா கல்லூரி, கிண்ணியா மத்திய கல்லூரி, கல்முனை ஷாஹிரா கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார்.
அத்துடன், பயிர்ச்செய்கை உத்தியோகத்தவராகவும் கிராம நிலதாரியாகவும் , அரசசேவையில் கடமை புரிந்துள்ளதுடன், சமூக தொண்டர் அமைப்புகளுடன் சமூக விழுமிய அபிவிருத்திப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
06 Jul 2025