2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சமுர்த்தி படிவங்கள் வழங்கல்

Editorial   / 2019 ஓகஸ்ட் 02 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

சமுர்த்தித் திட்டத்தில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு, சமுர்த்தி உரித்துப்படிவம் வழங்கும் நிகழ்வு, திருகோணமலை- குச்சவெளி பிரதேச செயலகத்தில், இன்று (2) நடைபெற்றது.

மேற்படி பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட  5,935 குடும்பங்களுக்கு, சமுர்த்தி உரித்துப்படிவங்கள் வழங்கப்பட்டன.

குச்சவெளி பிரதேச செயலாளர் தனேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் துறைமுகங்கள், கப்பற்றுறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

மேலும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.துரைரட்ணசிங்கம், கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்தித் சமரசிங்க, உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், பயனாளிகள் என பலரும் கலந்துகொண்டார்கள்.

ஆரம்பக் கைத்தொழில், சமூக வலுவூட்டல் அமைச்சினால் முன்னெடுக்கப்படும் தேசிய திட்டத்தில், குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் இதுவரைக்கும் 5,935 புதிய சமுர்த்தி பயனாளிகள் தகுதிபெற்று, ஆரம்ப வைபவத்தில் பத்திரங்களைப் பெற்றுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X