2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

சம்பந்தனின் வீட்டுக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம்

Editorial   / 2019 ஜூலை 11 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாம் என்று  நேற்று திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.இந்த கவனயீர்ப்புப் போராட்டம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின்  வீட்டுக்கு முன்னால் நடைபெற்றுள்ளது. தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (TNA)  அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்க கூடாது என்றும்  சாதாரண கல்முனை உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த முடியாத அரசுக்கு ஆதரவு வழங்குவது என்பது தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு செயலாகும் எனவும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .