Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஓகஸ்ட் 17 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கிடையிலான விஷேட கலந்துரையாடலொன்று, திருகோணமலையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் வாசஸ்தலத்தில், இன்று (17) நடைபெற்றது.
கிழக்கு மாகாணத்தினுடைய அபிவிருத்தி, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் செயற்றிட்டங்கள், எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில், இதன்போது எதிர்க்கட்சித் தலைவருக்கு தெளிவுபடுத்தியதாகவும் இந்தச் சந்திப்பு, ஆக்கபூர்வமாக அமைந்ததாகவும், கிழக்கு மாகாண ஆளுநரும் எதிர்கட்சி தலைவரும், கலந்துரையாடலின் பின்னரான ஊடகச் சந்திப்பின் போது தெரிவித்தனர்.
651 தொண்டராசிரியர்களுடைய பெயர்ப் பட்டியல், சிபாரிசுடன் மத்திய அரசாங்கத்தின் அனுமதிக்காக அனுப்பப்படவுள்ளதாகவும் தன்னுடைய பதவிக் காலத்தினுள், கிழக்கு மாகாணத்தில் 1,700 பட்டதாரிகளுக்கும் 351 டிப்ளோமா தாரர்களுக்கும், ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஆளுநர், கடந்த 10ஆம் திகதியன்று, கந்தளாயில் ஜனாதிபதி தலைமையில், 159 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டதாகவும் கூறினார்.
வறுமைக்குற்பட்ட கிராமங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில், கிழக்கு மாகாணத்தின் 30 கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்காக, 300 மில்லியன் நிதி முதலீடு செய்யப்படவுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago