Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 29 , பி.ப. 02:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், ஹஸ்பர் ஏ ஹலீம்
வெளியாகியுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளில், விஞ்ஞானப் பிரிவில், திருகோணமலை மாவட்ட ரீதியில், மூதூர் சாபி நகரைச் சேர்ந்த மாணவி எம்.எப் முஸாதிகா முதலிடம் பெற்று, வைத்தியத் துறைக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இம்மாணவியின் வீட்டுக்கு, முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் எம்.பி, நேற்று (28) மாலை நேரில் சென்று குறித்த மாணவிக்கும் அம்மாணவியின் பெற்றோருக்கும் வாழ்த்துத் தெரிவித்ததோடு, பரிசில்களையும் வழங்கிக் கௌரவப்படுத்தினார்.
இம்மாணவி, எதிர்காலத்தில் மருத்துவக் கற்கை நெறியினூடாகச் சிறப்புற்று, பிரதேசத்துக்குப் பெருமை சேர்க்க வேண்டுமெனக் கூறிய மஹ்ரூப் எம்.பி, அதற்கான சிறந்த முன்னெடுப்புகளும் திட்ட ஒழுங்குகளும் வழிவகுக்கப்பட்டு, சிறந்தமுறையில் செயற்படுத்தப்பட அனைவரும் பங்காற்ற வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
22 minute ago
48 minute ago