2025 மே 01, வியாழக்கிழமை

சான்றிதழ் வழங்கிவைப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 10 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், தீஷான் அஹமட்  

மூதூர் - பாட்டாளிபுரம் கிராமத்தில், கபிலர் கல்வித் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள மாலைநேர வகுப்புக்காகப் பயிற்றுவிக்கப்பட்ட 12 ஆசிரியர்களுக்கு, சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, பாட்டாளிபுரம் - நாகபிரான் ஆலய முன்றலில், இன்று (10) நடைபெற்றது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு, கல்வியில் பின்தங்கிக் காணப்படும் ஆதிவாசி பரம்பரையைச் சேர்ந்தோர் வாழும் பாட்டாளிபுரம் கிராமத்திலுள்ள  மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில், இந்த மாலைநேர வகுப்புக்கான நிதியுதவியை, கனடாவில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் வழங்கியுள்ளனர்.

இந்நிகழ்வில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு, ஆசிரியர்களுக்கான சான்றிதழ்களை வழங்கிவைத்தார்.

ஏனைய அதிதிகளாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மூதூர் பிரதேச சபை உறுப்பினர் நவரட்ணராசா ஹரிகரகுமார், தமிழ்த் தேசிய முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் ஸ்ரீ ஞானேஸ்வரன், செயலாளர் குகன், தமிழ்த் தேசிய முன்னணியின் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  அருட்செல்வன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .