2025 மே 08, வியாழக்கிழமை

சான்றிதழ்களைப் பெறுவதில் சிரமம்

அப்துல்சலாம் யாசீம்   / 2018 ஜனவரி 23 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா பிரதேச செயலகத்தில் பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ்களைப் பெறுவதில் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக, பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மக்களுக்கு வழங்கும் சேவைகளை, அரசாங்கம் பல்வேறு வகையில் துரிதப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ்களை அரை மணி நேரத்தில் வழங்கும் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

எனினும், கிண்ணியா பிரதேச செயலகத்தில் காலையில் விண்ணப்பம் கொடுத்தால் மாலையில் வழங்கப் படும் நிலையே இன்னும் நடைமுறையில் உள்ளது.

எனவே, தகவல்கள் பூரணமாகவுள்ள சகல விண்ணப்பங்களின் சான்றிதழ்களையும் துரிதமாக வழங்கும் நடைமுறையை பின்பற்ற  கிண்ணியா பிரதேச செயலாளர் கவனத்தில் எடுக்க வேண்டுமென, கிண்ணியா பிரதேச பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X