2025 மே 13, செவ்வாய்க்கிழமை

சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

Editorial   / 2017 ஒக்டோபர் 29 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத், எப்.முபாரக்

திருகோணமலை , மூதூர் கல்வி வலயத்திலுள்ள அறபா நகர் வித்தியாலயத்தில் இம்முறை தரம் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும், கற்பித்த ஆசிரியர்களையும் பாராட்டிக்  கௌரவிக்கும்  நிகழ்வு நாளை மறுதினம்      ( 31) மாலை  அறபா வித்தியாலய மைதானத்தில்   இடம் பெறவுள்ளது.

குறித்த பாடசாலையில், இம்முறை நடைபெற்ற தரம் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில், ஆறு மாணவர்கள் சித்தி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக, மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஹாசீம்,  கிழக்கு மாகாண பேரவைச் செயலாளர் எம்.சீ.எம்.சரீப்,
ஆகியோர் கலந்துக்கொள்ள உள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X