Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
தீஷான் அஹமட் / 2018 ஓகஸ்ட் 08 , பி.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட்ட 2018க்கான சிறுபோக நெற்செய்கை, வழமைக்கு மாற்றமாக பாரிய விளைச்சலை தந்துள்ளதையிட்டு விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வழமையாக இம்மாவட்டத்தில் அதிகளவான விவசாயிகள் மழை நீரை நம்பியதான பெரும்போக நெற்செய்கையினையே மேற்கொண்டு வந்ததோடு, சிறு போகங்களில் தண்ணீர் பிரச்சினை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டு வந்துள்ளனர்.
இச்சந்தர்ப்பத்தில் இம்முறை மாவட்டத்தில் பல பிரதேசங்களில் விவசாயிகளின் தண்ணீர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பல அபிவிருத்தி வேலைகள் நடை பெற்றதனால், அதனை நம்பி இம்முறை சுமார் 03 ஆண்டுகளுக்கு மேலாக செய்கை பண்ணப்படாமல் இருந்த இருபதாயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாயக் காணிகள் உட்பட ஐம்பதாயிரம் ஏக்கருக்கும் அதிகமான விசாயக் காணிகளில் அதிகளவான விவசாயிகள் இவ்வருடத்துக்கான சிறுபோக நெற் செய்கையை மேற்கொண்டனர்.
எனினும், வெளிமாவட்டங்களிலுள்ள பல பிரதேசங்களில் இம்முறை தண்ணீர்ப் பிரச்சினை காரணமாக சிறுபோக நெற்செய்கை வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தும் எங்களது மாவட்டத்தில் இப்பிரச்சினைகள் எதுவுமே இன்றி நல்ல விளைச்சல் கிடைத்துள்ளதென, திருகோணமலை மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
அத்துடன், இம்முறை மொரகஹந்த நீர்த் தேக்கத்திலிருந்து விவசாயத்துக்கான நீரை, கந்தளாய் குளத்துக்கு வழங்கி, அதனூடாக இம்மாவட்டத்திலுள்ள விவசாயப் பிரதேசங்களுக்கும் நீரைப் பெற்றுக் கொள்வதற்கு அனைத்து வாகையிலும் முயற்சி செய்தவர்களுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.
இம்முயற்சிகள் மூலமாக இன்னும் செய்கை பண்ணப்படாமல் இருகின்ற மேலதிக நிலங்களிலும் நெற்செய்கை மேற்கொள்வதற்கு தாங்கள் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, திருகோணமலை மாவட்ட நீர்ப்பாசன பணிப்பாளரை, இம்மாவட்ட விவசாயிகள் கேட்டுக் கொள்கின்றனர்.
38 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
2 hours ago
2 hours ago