அப்துல்சலாம் யாசீம் / 2020 பெப்ரவரி 25 , பி.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வான் எல பகுதியில் 15 வயதுச் சிறுமியை, வீட்டாருக்குத் தெரியாமல் அழைத்துச் சென்ற இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளாரென பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் சிறுமியின் பாட்டனார், திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் நேற்று (24) முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாடு குறித்து துரித விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், உடனடியாக அநுராதபுரம் - மிஹிந்தலை பகுதியிலுள்ள வீடொன்றில் தனிமையில் வைக்கப்பட்டிருந்த சிறுமியை மீட்டு, இராணுவ வீரரை அன்றிரவே கைதுசெய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர், யாழ்ப்பாணம் இராணுவ முகாமில் கடமையாற்றி வரும் மிஹிந்தலை, மரதன்கடவல பகுதியைச் சேர்ந்த என்.சஞ்சீவ நிமல சேன (23 வயது) என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரை, கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் திருகோணமலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .