2025 மே 08, வியாழக்கிழமை

சிறுமியைத் தாக்கிய தந்தைக்குச் சிறை

எப். முபாரக்   / 2018 பெப்ரவரி 08 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

உப்புவெளிப் பகுதியில், தனது மகளைத் தாக்கிக் காயப்படுத்திய தந்தையொருவருக்கு, 10,000 ரூபாய் நட்டஈடு செலுத்துமாறு, திருகோணமலை நீதவான் ஏ.பிரேம சங்கர், நேற்று (07) உத்தரவிட்டார்.

அத்தோடு, அந்நட்டஈட்டைச் செலுத்தாத பட்சத்தில் 10 மாதங்கள் சிறைத்தண்டனையும், 2,500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதோடு, அபராதத்தைச் செலுத்தாவிடின், மேலதிகமாக மூன்று மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படுவதாக, நீதவான் உத்தரவிட்டார்.

திருகோணமலை, உப்புவெளி, விஜிதபுர பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபயொருவருக்கே, இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டது.

2015ஆம் ஆண்டு காலப்பகுதியில், மதுபானம் அருந்திவிட்டு வீட்டுக்குச் சென்று, தனது 15 வயது மகளைத் தாக்கிக் காயப்படுத்திய மேற்படி தந்தைக்கு எதிராக, பொலிஸாரால் தொடரப்பட்ட வழக்கின் போதே, குறித்த நபர், குற்றவாளியாக இனங்காணப்படார்.

இதனையடுத்து, மேற்கண்ட உத்தரவை நீதவான் விதித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X