Editorial / 2022 ஜூன் 23 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர்
சிறுவர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அனைவரும் அக்கறையுடன் செயற்படவேண்டுமென திருகோணமலை மாவட்டச் செயலாளர் பி.எச்.என். ஜயவிக்ரம வேண்டிக் கொண்டார்.
மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் கூட்டம், மாவட்டச் செயலாளர் தலைமையில், மாவட்டச் செயலகத்தில் நேற்று (22) நடைபெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “பிரதேச செயலக ரீதியாக சிறுவர்களது நலன்கள் மற்றும் தேவைப்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்படல் வேண்டும். சிறுவர்கள் வாழ்வதற்குரிய நல்லதொரு சூழலை ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும். அதன்மூலம் அவர்களை நாட்டுக்கு வேண்டிய பிரஜைகளாக மாற்றியமைக்க முடியும்.
“திருகோணமலை மாவட்டத்தில் பாடசாலை கல்வியை இடைநடுவில் கைவிட்ட 430 மாணவர்கள் காணப்படுகின்றனர். இவர்களை மீளப் பாடசாலைகளில் இணைப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார்.
அத்துடன், பல சிறுவர்களுக்குப் பிறப்புச் சான்றிதழ்கள் பெற்றுக்கொள்வதிலுள்ள சிரமங்கள், இள வயதுத் திருமணங்கள், சிறுவர்களை வேலைக்கமர்த்தல், போதைப்பொருள் பாவனை, வீட்டு வன்முறை, பிள்ளைகளை சுமந்த வண்ணம் யாசகமெடுத்தல், சிறுவர் போஷாக்கு, விஷேட தேவையுடையவர்களின் நலன்சார் விடயங்கள், சிறுவர் கல்வி, சிறுவர் சுகதாரம் உட்பட பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
சிறுவர்களோடு தொடர்புப்பட்ட அனைத்து நிறுவனங்களும் தனித்தனியாக செயற்படுவதனை விடக் கூட்டாக ஒருங்கிணைந்து நீண்டகால, குறுங்கால திட்டங்களை வடிவமைத்து செயற்படுத்த வேண்டியதன் அவசியத்தை இதன்போது மாவட்டச் செயலாளர் வலியுறுத்தினார்.
53 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
3 hours ago