எப். முபாரக் / 2020 மார்ச் 12 , பி.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலையில், மகளிர் தின விழா, திருகோணமலை சிறைச்சாலை அத்தியட்சகர் ரஜீவ சிறிமால் சில்வா தலைமையில் இன்று (12) நடைபெற்றது.
"பெண்களின் மகத்துவம்"எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த விழாவில், பெண் சிறைக்கைதிகளுக்கு அன்பளிப்புப் பொருள்கள் வழங்கப்பட்டன.
நிகழ்வில், திருகோணமலை சிறைக் கைதிகள் நலன்புரிச் சங்கத்தின் இணைத் தலைவர் தயானந்த ஜயவீர, பிரதான ஜெயிலர் அருள் வண்ணன், மாவட்டச் செயலக சிறுவர் மற்றும் பெண்கள் உத்தியோகத்தர் தீப்பானி, சிறைக்கைதிகள் நலன்புரிச் சங்க உறுப்பினர்கள், சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .