2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

‘சுத்தமான குடிநீரை வழங்கவும்’

அப்துல்சலாம் யாசீம்   / 2018 ஒக்டோபர் 29 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, மொறவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மஹாதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலைக்கு, சுத்தமான குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, நோயாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வைத்தியசாலைக்கு, ஹொரவ்பொத்தானை, கோமரங்கடவல பகுதிகளைச் சேர்ந்த அதிகளவிலான நோயாளர்கள் வருகை தருவதாகவும், நோயாளர்கள் விடுதியில் தங்கி ​சிகிச்சை பெறுகின்ற போது, நோயாளர்களுக்குச் சுத்தமான குடிநீர் இன்மையால் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், நோயாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

எனவே, நோயாளர்களின் நலன் கருதி, சுத்தமான குடிநீரை வழங்குவதற்கு, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சும் திருகோணமலை பிராந்திய சுகாதாரத் திணைக்களமும் கவனம் எடுக்க வேண்டுமென, நோயாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X